விமானங்களை அழிக்கும் ஆயுதங்களுடன் சிக்கிய நபர்கள்! தென்னிலங்கையில் பரபரப்பு


விமானங்களை அழிக்கும் ஆபத்தான வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டமையினால் தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெலிப்பன்ன பிரதேசத்தில் துப்பாக்கிகள் மற்றும் விமானங்களை அழிக்கும் ஆயுதங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பேர 12 ரக துப்பாக்கி, கல்கடஸ் ரக துப்பாக்கி உட்பட பல ஆபத்தான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பிரதேசத்தை 61 வயதான பிரேமதிலக்க என்பவரும் வெப்பன்ன பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான அப்பன் ஜெயசங்கர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரேமதிலக்க என்பவர் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்