அழிக்கப்பட்ட பாகிஸ்தான் தளம்: இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள வீடியோ

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அக்னூர் பிரிவில் பாகிஸ்தான் தளம் ஒன்று அழிக்கப்பட்ட வீடியோவை இந்திய இராணுவம் வெளியிட்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இதில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் அக்னூர் பிரிவில் பாகிஸ்தான் தளம் ஒன்று அழிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்றையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், அந்நாட்டின் தேசிய கொடி தலைகீழாக பறக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்