இலங்கை கண்காணிக்கப்பட வேண்டும்! சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சர்வதேசத்தின் உறுதியான ஆதரவு மற்றும் கண்காணிப்பு அவசியம் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நடப்பு மனித உரிமைகள் ஜெனீவா அமர்வுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கண்காணிப்பகம் இதனை தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட யோசனையின்படி சில விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
எனினும் பல விடயங்களில் காலதாமதம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டபோதும் அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.
போர்க்குற்ற பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகள் என்ற விடயத்தில் இன்னும் இணக்கம் ஒன்று எட்டப்படவில்லை.
இந்தநிலையில் ஜெனீவா யோசனையை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. எனினும் தொடர்ந்தும், பொறுப்புக்கூறலில் காலதாமதம் இருக்கக்கூடாது.
அதற்கு பதிலாக இலங்கை தமது பொறுப்பை நிறைவேற்ற சர்வதேசத்தின் கண்காணிப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கள அவதானிப்பு சாட்சிய திரட்டல், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை என்பன அவசியம் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்