ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு பேரிடியாக மாறிய செய்தி


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என இந்திய அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலைகாரர்களை விடமாட்டோம். என்ன ஆனாலும் விடுதலை கிடையாது.
எழுவர் விடுதலை குறித்துக் கூறப்பட்டுள்ள திமுக அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடுங்கள்.
அவர்களை விடவே மாட்டோம். மாநில அந்தஸ்தில் இருக்கிற தமிழிசைக்கு டெல்லியின் கொள்கைகள் தெரியாது.
இதுகுறித்து டெல்லிதான் முடிவு செய்ய வேண்டும். எழுவர் விடுதலைக்கு டெல்லி ஒத்துக்கொள்ளாது. 7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை, அது நடக்காது என அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த எழுவரின் விடுதலையையும் எதிர்பார்த்து இருந்த அவர்களின் குடும்பத்தாருக்கு சுப்ரமணியன் சுவாமியின் செய்தி பேரிடியாக மாறியுள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்