பேஸ்புக் இன்னமும் முடங்கிக்கிடக்கும் நாடுகள் எவை தெரியுமா?சர்வதேச நாடுகள் பலவற்றில் முடங்கிக்கிடக்கும் பேஸ்புக், வட்ஸ் அப், இன்ஸ்டகிராம் முதலான சமூக வலைத்தளங்கள் இன்னமும் சீர்செய்யப்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் தருகின்றன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்றைய தினம் மேற்படி சமூக வலைத்தளங்கள் உலகம் முழுவதும் நேற்று திடீரென முடங்கின.
இதனையடுத்து பயனர்களின் புகார்கள் அதிகரிக்க துவங்கிய நிலையில் பல மணிநேரங்களின் பின் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்துவிட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால், உலகளவில் இன்னமும் சில பயனாளர்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து, டெக்சாஸ், சீட்டல், வாஷிங்டன், லத்தின் அமெரிக்காவின் சில பகுதிகள், பெரு, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் பயனர்களுக்கு சமூக வலைதள கணக்குகள் முடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
லொக் அவுட் செய்யாத பயனர்கள் சமூக வலை கணக்குகளை இந்த இடங்களில் பயன்படுத்த முடிவதாகவும், அவர்கள் ஒருமுறை லாக் அவுட் செய்துவிட்டு மீண்டும் முயன்றால் அவர்களால் லாக் இன் செய்ய முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இது சைபர் தாக்குதல் இல்லை எனவும் பிரச்னையை சரி செய்ய பேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களின் டெக் டீம் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
விரைவில் உலகம் முழுவதும் இந்த தொழில் நுட்பக் கோளாறு சீராகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்