பிரபல நடிகர்களை தாக்கி பேசிய வரலக்ஸ்மி சரத்குமார்?

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி பெரிய நடிகர்கள் கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது பற்றி நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பெரும் கொடூரம் தொடர்பாக திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில், இது தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில் வரலட்சுமி, 'இச்சம்பவத்தில் மிகப் பெரிய நடிகர்கள் சிலர் கருத்துக்களை சொல்லாமல் இருப்பது' தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், 'மிகப்பெரிய சக்திகளுக்கு மிகப்பெரிய பொறுப்புடைமை உண்டு' என்று அவர் கூறியுள்ளார். அதோடு, இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மீடூ இயக்கத்தின் போதும் கூட சில நடிகர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. அதேபோல் இந்த பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திலும் அமைதியாக இல்லாமல், பெரிய நடிகர்கள் தங்களது பலத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் வரு வலியுறுத்தியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்