டோனியால் இந்திய அணிக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை..அதிரடியாக பேசிய முன்னாள் வீரர்


டோனி இந்திய அணியில் இருந்தாலும், அவரால் ஒரு பிரயோஜனுமும் ஆக போவதில்லை என்று முன்னாள் வீரர் காம்பீர் அதிரடியாக கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றி சாதனை படைத்தது.
நான்கு ஆண்டுகளுக்கு பின் அவுஸ்திரேலியாவுடன் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணியே கிட்டத்தட்ட உலகக்கோப்பை அணிக்கு ஆடும் என்று கோஹ்லி தெரிவித்திருந்தார்.
இந்த போட்டியில் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, ரிஷ்ப்பாண்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
ஆனால் அதே சமயம் டோனி உலகக்கோப்பையில் ஆடுவார் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோஹ்லி கூறியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் காம்பீர் கூறுகையில், கோஹ்லி கிட்டத்தட்ட இந்த அணிதான் உலக கோப்பையில் ஆடப்போகிறது என்று கூறியுள்ளார்.


ஆனால் இந்த அணியில் பேட்டிங்கில் டெப்த் கிடையாது. டோனி அணியில் இணைந்தாலும் கூட இந்த அணி சிறந்த அணியாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்