பொலிசார் மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்த டோனி? வெளியான தகவல்


ஓட்டலில் தங்கியிருக்கும் தன்னிடம் பொலிஸ் உயர் அதிகாரிகள் தங்களது வீட்டுப் பிள்ளைகளை அழைத்து வந்து தொல்லை தருவதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கிவிட்டது. நேற்று நடந்த முதல் போட்டியில், டோனி தலைமையிலான சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் சென்னை நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள டோனி, காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது தனிப்பட்ட சுதந்திரத்துக்கு இடையூறு தரும் அளவில், காவல் அதிகாரிகள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அழைத்து வந்து செல்ஃபி எடுக்கவும், போட்டோ எடுக்கவும் நிற்கின்றனர்.
இது மிகுந்த இடைஞ்சலை உருவாக்கியுள்ளது. தனிப்பட்ட சுதந்திரத்தை தடுக்கும் வகையில் இது எப்படி அனுமதிக்கப்படுகிறது என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த புகாரினை டோனி தனது அணி மேலாளர் ரசூல் மூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


பொதுவாக அனைவரிடமும் சாதாரணமாக பழகக்கூடிய டோனி, சமீபகாலமாக மைதானங்களில் ரசிகர்களை காணவும், அவர்களிடம் விளையாடவும் செய்கிறார். இந்நிலையில் தான் இவ்வாறு ஒரு புகாரை அவர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்