நியூசிலாந்து தீவிரவாதி எங்கிருந்து துப்பாக்கி வாங்கினான் தெரியுமா?

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பிரெண்டன் டாரண்ட், ஒன்லைனில் இருந்து துப்பாக்கி வாங்கியிருப்பதாக அந்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்தில் 50 பேர் இதுவரை பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட பிரெண்டன் டாரண்ட்(28) என்பவரை பொலிசார் கைது செய்தனர். இந்நிலையில் டாரண்ட் ஒன்லைனில் ஆயுதங்கள் வாங்கியதாக தெரியவந்துள்ளது.


நியூசிலாந்தைச் சேர்ந்த துப்பாக்கி நிறுவனமான கன் சிட்டி இதனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் கூறுகையில், ‘கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு நடத்திய டாரண்ட், ஒன்லைனில் இருந்து தான் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வாங்கியுள்ளார்.
ஆனால், அவர் கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்திய ஆயுதங்கள் ஒன்லைனில் விற்கப்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள மொத்த மக்கள் தொகையான 50 லட்சத்தில், 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் துப்பாக்கிக்கு உரிமம் வைத்துள்ளனர். இதில் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பதற்கான ஆரம்ப வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்