புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள்? முள்ளிவாய்க்காலில் வீடொன்று முற்றுகை

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள தனியார் வீடு ஒன்றில் இன்று அகழ்வு பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று முற்பகல் அவ்விடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து குறித்த வீட்டினை முற்றுகையிட்டு பணியை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்