இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா?நாட்டிற்குள் எந்தவொரு குள்ள மனிதரின் நடமாட்டங்கள் தொடர்பிலும் தமக்கு உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன பிபிச் செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிபிச் செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் குறித்து வெளியான செய்திகள் தொடர்பில் தாம் விடயங்களை ஆராய்ந்திருந்தேன்.
எனினும், நாட்டிற்குள் எந்தவொரு குள்ள மனிதரின் நடமாட்டங்கள் தொடர்பிலும் தமக்கு உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
வேற்று கிரகவாசிகள் இலங்கைக்குள் வருகைத் தந்துள்ளதாக கூறப்படுகின்ற கருத்தையும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன நிராகரித்தார்.
எவ்வாறாயினும், ஊடக பிரபல்யத்தை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் சில தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், குள்ள மனிதர்களின் நடமாட்டம் குறித்து தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்ற கருத்தில் எந்தவித உண்மை தன்மையும் கிடையாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்