ரிஷாப் பண்ட் கொடுத்த அதிர்ச்சி! மலிங்காவுக்கு உடனடி அழைப்பு

மும்பை இந்தியன்ஸ் உடனடியாக மலிங்காவை தங்களது அணியில் விளையாட அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வியடைந்தது. குறிப்பாக டெல்லி அணியின் ரிஷாப் பண்ட்டை மும்பை பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
மும்பை அணியில் விளையாடும் இலங்கை வீரர் லசித் மலிங்கா, உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை.
ஆனால், டெல்லி அணிக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளை மும்பை இந்தியன்ஸ் சந்திக்க உள்ளது. எனவே மலிங்காவை தங்களது அணியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என மும்பை அணி கோரியதைத் தொடர்ந்து,
பி.சி.சி.ஐ இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு இலங்கையும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மலிங்கா ஐ.பி.எல் தொடரின் சில போட்டிகளில் ஆட இலங்கை அணி அனுமதி அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக தலைமைத் தேர்வாளரான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஷந்தா டிமெல் கூறுகையில், ‘மலிங்கா எங்களது சிறந்த பந்துவீச்சாளர் ஒருநாள் போட்டியில் அவரது இடம் உறுதியானது தான். ஆகவே, உலகக்கோப்பை அணியில் அவர் இடம்பெறுவார்’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்