இந்தியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து! ஈழத்தமிழர்கள் விடயத்தில் ராகுல்காந்தியில் நிலைப்பாடு மாறுமா?சுதந்திர தமிழீழம் தான் என் வாழ்வின் இலட்சியம், அதனை அடைவதற்கு மிகவும் சிந்தித்து எச்சரிக்கையுடனே சில முடிவுகளை எடுத்திருப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்
“விடுதலைப் புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உதவிகளை செய்தார். எனினும், ஜெயலலிதா விடுதலைப் புலிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தடையையும் கொண்டு வந்தார். மத்தியில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்துள்ளது.
ஈழத்தமிழர் விடயத்தில், இந்திராகாந்தி எடுத்த நிலைப்பாட்டையே ராஜீவ் காந்தியும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக அதிகாரிகளோடு மற்றும் பலர் சேர்ந்து அவருக்குத் தவறான வழிகாட்டுதலைக் காட்டிவிட்டனர்.
எனினும், ராகுல்காந்தி, தமிழர்களுடைய உணர்வுகளை ஆழமாகப் புரிந்துவைத்திருக்கிறார். இந்நிலையில், ராகுல்காந்தியின் நிலைப்பாடு மாறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இனிவரும் காலங்களில் இனி ஈழத்தமிழர்களைப் பாதுகாத்தால் தான், பூகோள ரீதியாக இந்தியாவையும் பாதுகாக்க முடியும்’ என்ற உண்மை நிலையை ராகுல்காந்தியும் தெரிந்து கொள்வார்.
இந்நிலையில், சுதந்திர தமிழீழம் எனும் எனது இலட்சியத்தை அடைய மிகவும் சிந்தித்து எச்சரிக்கையுடன், திமுக கூட்டணியுடன் இணைந்திருப்பதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்