மன்னாரில் மற்றுமோர் இராணுவ முகாமிற்குள் மனிதப்புதை குழி? முகாமை நிரந்தரமாக்குவதால் ஏற்பட்டுள்ள சந்தேகம்!மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி பகுதியில் கீரி கிராமத்தில் அமைந்துள்ள சனிவிலாச் கடற்படை முகாமை நிரந்தர கடற்படை முகாமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
குறித்த கடற்படை முகாமானாது யுத்தம் இடம் பெற்ற காலத்திற்கு முன்னரே அமைக்கப்பட்டு தற்போது வரை தற்காலிக முகாமகவே காணப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த காணியினை நிரதரமாக பெற்று கடற்படை முகாமை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அக் கடற்படை முகாமானது சுமார் 9 ஏக்கரில் தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கின்ற போதும் அதில் சுமார் ஆறு ஏக்கர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபனத்துக்கு சொந்தமானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் 3 ஏக்கர் காணியை தனியார் சிலர் உரிமை கோருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் குறித்த பகுதியில் அதிகளவில் மக்கள் வாழும் பகுதி என்பதாலும் ஏற்கனவே தாழ்வுபாட்டு கடற்கரை பகுதியில் கடற்படை குடி கொண்டு இருப்பதாலும் அப் பகுதியில் இருந்து கடற்படை வெளியேற வேண்டும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது குறித்த சனிவிலாச் கடற்படை முகாமுக்குள்ளும் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த முகாமை நிரந்தரமாக கோருவதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்