ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சித் தகவல்! புதிய நடைமுறை அறிமுகம்


36 நாடுகளுக்கு On arrival விசா வசதியை வழங்கும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து ஆறு மாதங்களுக்கு கட்டணமின்றி on arrival விசா வழங்க இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியள்ளது.
அதற்கமைய பரீட்சார்த்த நடவடிக்கையாக 36 நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளுக்கு on arrival விசா வழங்கவுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, தாய்லாந்து, கொம்போடியா மற்றும் ஜப்பான் உட்பட நாடுகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
36 நாடுகளிலிருந்தும் கட்டணம் இன்றி இலங்கைக்கு வருகைத்தருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறை ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நடைமுறை வெற்றியளித்தால் தொடர்ந்து முன்னெடுக்கப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், தோல்வியடைந்தால் கைவிடவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் நாட்டிற்கு வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுகின்றது. அதனை தடுக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்படுகிறது.
2019ம் ஆண்டு இறுதிக்குள் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் வரவழைப்பது சமகால அரசாங்கத்தின் நோக்கமாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்