ரசிகர்களால் சரிந்த இரும்பு வேலியை தாங்கிப் பிடித்த நடிகர் விஜய்! வைரலாகும் வீடியோரசிகர்களின் கூட்டத்தால் சரிந்து விழும் இரும்பு வேலியை நடிகர் விஜய் தாங்கிப்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.
எனினும், சில காரணங்களால் இடையே இடைவெளி விடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விஜயை காண அவரது ரசிகர்கள் திரண்டிருந்தனர்.


இரும்பு வேலிக்கு பின் நின்று விஜய்யை பார்த்து கையசைத்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஒரு கட்டத்தில் அந்த இரும்பு வேலி சரிந்து விழ, உடனே நடிகர் விஜய் தாங்கிப் பிடித்தார். சிறிது நேரத்தில் படக்குழுவினரும் அவருடன் சேர்ந்து வேலியை தாங்கிப்பிடித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்