எந்த நேரத்திலும் எச்சரிக்கையாக இருக்கவும்! மகிந்தவின் மிரட்டல்


நாங்கள் எதிர்க் கட்சியாக இருக்கும் போது இந்த அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றதில் முக்கிய அமைச்சுக்கள் இரண்டின் நிதி ஒதுக்கீடுகள் தோற்கடிக்கப்பட்டன. இது தொடர்பில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
நாடாளுமன்றத்தில் நாம் எதிர்க் கட்சியில் இருக்கும் போது அரசாங்கம் எந்த நேரத்திலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நாம் நாடாளுமன்றத்தில் முக்கிய அமைச்சுக்கள் இரண்டின் நிதி ஒதுக்கீடுகளை தோற்கடித்தோம். இந்த இரண்டு அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீடு என்பது வரவு செலவுத் திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியாகும். எனவே அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எதிர்வரும் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு வருகின்றது. இந்நிலையில் இரண்டு அமைச்சுக்கான நிதியொதுக்கீடு தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் மகிந்த ராஜபக்சவின் இவ் எச்சரிக்கை பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்