தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வாருங்கள்... நன்மைகள் ஏராளமாம்!



இன்றைய உலகில் உடல் ஆரோக்கியத்திற்கு எத்தனை மாத்திரை மருந்துகள் வந்தாலும் அந்தகாலங்களிலிருந்து கையாளப்பட்டு வந்த இயற்கை மருத்துவமே சிறந்தது என்று கூறப்படுகின்றது.
இந்த காலங்களில் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை நோய் இல்லாதவரே இல்லை என்று தான் சொல்ல முடியும். இதற்காக நாம் அன்றாடம் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதிலிருந்து விடுபட நம் முன்னோர்கள் காலங் காலமாக கையாண்டு வந்த இயற்கை முறையிலான மருத்துவ குணங்களை உள்ளடக்கிய உடலுக்கு நல்ல கவசமாக இருக்கும் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானங்களை அன்றாடம் குடித்து வருகின்றனர்.
அதில் கற்றாழை ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
அந்தவகையில் நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடியைக் கலந்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.
குறிப்பாக சக்கரை நோய் முதல் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் அடியோடு அழிக்க உதவி புரிகின்றது.
தற்போது இந்த ஜூஸ் குடிப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் மாற்றங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையானவை
  • வெந்தய பொடியை - 1 டீஸ்பூன்
  • நெல்லிக்காய் ஜூஸ் - 3 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின் தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்