இலங்கையில் முதலீடு செய்யும் தமிழகத்தை பிரபல அரசியல்வாதியின் குடும்பம்ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட உள்ள பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை நிர்மாணிக்கும் புதிய முதலீட்டு திட்டத்தில் தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் பிரபல அரசியல்வாதியின் குடும்பம் முதலீடு செய்ய உள்ளதாக இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
3.85 பில்லியன் டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட உள்ள இந்த பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கு சிங்கப்பூரை மையமாக கொண்ட சில்வர் பார்க் இன்டர்நேஷனல் தனியார் நிறுவனம் ஆயிரத்து 887 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளது.
இந்த நிறுவனத்தின் 4 பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் மூன்று பேர் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள். இவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்ப உறுப்பினர்கள் என இந்து பத்திரிகை கூறியுள்ளது.
இதனடிப்படையில், இந்தியர்களின் 70 வீத பங்குகளை கொண்டுள்ள சிங்கப்பூர் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கான முதலீட்டை செய்ய உள்ளது.
இந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை நிர்மாணிக்க தேவையான 2 ஆயிரம் மில்லியன் டொலர்கள் கடன் மூலதனமாக பெறப்பட உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்