இன்னும் ஒரே வாரத்தில் அஜித் ரசிகர்களுக்கு மெகா கொண்டாட்டம் – வெளியான அதிரடி அறிவிப்பு.!


இன்னும் ஒரே வாரத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு மெகா கொண்டாட்டாட்டம் காத்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தனக்கென ஒரு மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மாபெரும் வெற்றி படங்களாகியுள்ளன. சில படங்கள் தோல்வியையும் தழுவியுள்ளன.
இவரது நடிப்பில் கடந்த 2007-ல் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பில்லா.
ஆனால் அதன் பின்னர் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
பில்லா படத்தில் தல அஜித் செம ஸ்டைலிஷாக இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர். தற்போது மீண்டும் இப்படத்திற்கான கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆம் வரும் மார்ச் 18-ம் தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் உள்ள ஜி.கே சினிமாஸில் பில்லா படத்தை மீண்டும் திரையிட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்புறம் என்ன ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா?

கருத்துரையிடுக

0 கருத்துகள்