இராணுவத்தினர் போர்க்குற்றம் செய்தனர்! வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன: சரத் பொன்சேகாசில இராணுவ அதிகாரிகள் பல சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கான சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வெள்ளைக்கொடி சம்பவத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் தன்னிடம் இருப்பதாகவும் தேவையான நேரத்தில் அவற்றை முன்வைக்க தயாராக இருப்பதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட சட்டவிரோதமான நடவடிக்கைகள் சம்பந்தமான காணொளிகளும் தன்னிடம் இருப்பதாகவும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்