நான் பட்லரை மட்டமாக அவுட் செய்தேனா? சர்ச்சை அவுட் குறித்து அஸ்வின் கொடுத்த தெளிவான விளக்கம்ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் பட்லரை அவுட்டாக்கியதில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை என்று பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 12-வது ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பஞ்சாப் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 13-வது ஓவரின் போது ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லரை பஞ்சாப் அணி வீரரான அஸ்வின் மன்கட் முறையில் அவுட்டாக்கினார்.
அப்போது பட்லர் மற்றும் அஸ்வினுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் சென்றது. இதனால் இது மூன்றாவது நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது நடுவரும் அவுட் என்று கூற, பட்லர் கடும் ஆத்திரத்துடன் வெளியேறினார்.
என்ன தான் கிரிக்கெட் விதி என்றாலும், அஸ்வின் இப்படி மட்டாக அவுட்டாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று முன்னணி வீரர்கள் உட்பட பலரும் கூறி வருவதால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அஸ்வின் நான் செய்தது சரி தான் துடுப்பாட்ட வீரர் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றும் சக்திகளாக இருக்கும்.
நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது. நான் கிரிக்கெட்டில் உள்ள விதிமுறைகளின்படிதான் செயல்பட்டேன், மன்கட் அவுட் செய்தேன். எப்போதும் துடுப்பாட்ட வீரர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.


ஒரு பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட முழுமையான உரிமைகளின் அடிப்படையில்தான் பட்லரை நான் ஆட்டமிழக்கச் செய்தேன். இதில் எந்தவிதமான வாக்குவாதத்துக்கும் இடமில்லை. என் உள்மனதுக்கு இது தவறு எனத் தெரியவில்லை. கிரீஸை விட்டு பட்லர் வெளியே சென்றபின்புதான் நான் அவுட் செய்தேன்.

இதில் விளையாட்டுத்தனம் என்கிற அடிப்படையில் எவ்வாறு பார்ப்பது என எனக்குப்புரியவில்லை, இதில் கிரிக்கெட் ஸ்பிரிட் எவ்வாறு வந்தது? அவருக்கு மட்டுமில்லை, அந்த இடத்தில் நான் இருந்தாலும் எனக்கும் இதே போன்று அவுட்டாகியிருந்தால் வெளியேற வேண்டியது தான், இரண்டு வீரர்களையும் ஒப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்