பிரித்தானிய அரசியிலில் தெரேசா மே திடீர் அறிவிப்பு!! அடுத்து என்ன நடக்கும்?


இதுவரை இருமுறை தோற்கடிக்கப்பட்ட தமது Brexit ஒப்பந்தமானது பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தாம் பிரதமர் பதவியை துறக்க தயார் என தெரேசா மே முதன் முறையாக தெரிவித்துள்ளார்.
பித்தானியாவில் பிரெக்சிற் விவகாரம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களுடன் கலந்தாலோசித்த பிரதமர் தெரேசா மே,
தமது பிரெக்சிற் ஒப்பந்தமானது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தாம் பதவியை துறக்கவும் தயார் என தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கான காலக்கெடுவை அவர் குறிப்பிடவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்சிற் தொடர்பான அடுத்தகட்ட கலந்தாலோசனைகளில் தாம் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமையாது என அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தெரேசா மேவின் இந்த முடிவு பிரெக்சிற் தொடர்பான தமது முயற்சிக்கு பலன் தரும் என அவர் நம்புவதாக தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி வெளியேற வேண்டும்.
ஆனால் இருமுறை பிரித்தானிய பாராளுமன்றத்தால் தமது ஒப்பந்தமானது நிராகரிக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய தலைவர்கள் பிரித்தானியா வெளியேறும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்