அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியில் மட்டும் இத்தனை சென்டிமெண்ட்களா!


அஜித்தின் நடிப்பில் உருவாகி வருகின்ற நேர் கொண்ட பார்வை படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்தியின் பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்க வித்யா பாலன், ஸ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இப்படம் வெளியாகவுள்ள ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 8 அஜித் படங்கள் வெளியாகியுள்ளனவாம். ராஜாவின் பார்வையிலே, பகைவன், உன்னிடத்தில் என்னை கொடுத்து, அமர்களம், மங்காத்தா, விவேகம் அவற்றில் சில. தற்போது நேர்கொண்ட பார்வையும் அதன் வரிசையில் 9வது படமாக இணையவுள்ளது.
மேலும் 10 தேதி செண்டிமெண்ட்டிலும் பல அஜித் படங்கள் வெளியாகியுள்ளன. உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான விஸ்வாசம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்