புதிய அன்ரோயிட் இயங்குதளத்தின் பீட்டா பதிப்பினை வெளியிட்டது கூகுள்


தற்போது உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மொபைல் இயங்குதளமாக அன்ரோயிட் காணப்படுகின்றது.
இதற்கான புதிய பதிப்புக்களை கூகுள் நிறுவனம் வருடா வருடம் அறிமுகம் செய்து வருகின்றது.
இந்த வரிசையில் தற்போது Android Q எனும் புதிய பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளது.
எனினும் இதிலுள்ள குறைபாடுகளைக் கண்டறியும் முகமாக குறித்த இயங்குதளத்தின் பீட்டா பதிப்பு முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை தனது பிக்செல் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இப் புதிய பதிப்பானது மேம்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்பு முறைகளைக் கொண்டிருப்பதாக கூகுள் தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளது.
அது மாத்திரமன்றி கமெராக்களுக்கான புதிய வசதிகள், அப்பிளிக்கேஷன்களின் விரைவான செயற்பாடு மற்றும் புதிதாக அறிமுகமாகும் மடிக்கக்கூடிய கைப்பேசிகளுக்கான (Foldable Smartphones) வசதிகள் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்