கொத்து கொத்தாக மனித உடல்கள்... மிதந்து வரும் பாம்புகள்: மொசாபிக்கில் பயங்கரம்!

கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் 'இடை' புயல் தாக்கியதில் சுமார் 1லட்சத்து 20 ஆயிரம் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியப் பெருங்கடலில் உருவான ‘இடை’ என்ற புயலானது கடந்த மார்ச் 14ம் திகதியன்று மொசாபிக் நாட்டின் பெய்ரா நகரில் கரையை கடந்தது. பின்னர் மணிக்கு 177கிமீ வேகத்தில் அண்டை நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் மலாவி நோக்கி நகர்ந்தது.
இதனால் ஏற்பட்ட கனமழையால் மொசாம்பிக், ஜிம்பாப்வே, மலாவி ஆகிய நாடுகளில் தற்போது வரை 700க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


மொசாபிக் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 242 ல் இருந்து 417 ஆக உயர்ந்துள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் Celso Correia தகவல் வெளியிட்டுள்ளார்.
அதேமசயம் 259 பேர் ஜிம்பாப்வேயிலும், மலாவிவில் 56 பேர் உயிரிழந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருப்பதால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அந்நாட்டு அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை சுமார் 2000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் பாதுகாப்புப் படை தகவல் வெளியிட்டுள்ளது.


ஏறக்குறைய 90,000 மொசாம்பிக்கர்கள் தற்காலிக இடங்களில் தங்கி இருக்கின்றனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில், இறந்தவர்களின் சடலங்கள் கொத்துக் கொத்தாக மிதப்பதாலும், பாம்புகள் அதிகளவில் திரிவதாலும் சுகாதாரக்கேடு ஏற்படலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்