ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்!


இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் அணியை சேர்ந்த அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ தீர்ப்பளித்திருந்தது.
இதனை எதிர்த்து ஸ்ரீசாந்த் கேரளா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். அங்கு வழக்கினை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
இதனையடுத்து 2017ம் ஆண்டு பிசிசிஐ சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி, வாழ்நாள் தடை தொடரும் என அறிவித்தார்.
இதனை எதிர்த்து ஸ்ரீசாந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் இன்று வழக்கினை விசாரித்த நீதிபதி, ஸ்ரீசாந்த் மீது வாழ்நாள் தடை விதித்ததற்கான பிசிசிஐயின் பதிலில் திருப்தியில்லை என கூறியதோடு, வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டார்.
மேலும், பிசிசிஐயின் ஒழுக்காற்று குழு மூன்று மாதங்களுக்குள் ஸ்ரீசாந்திற்கு வழங்கப்படும் தண்டனையை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் உத்தரவிட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்