இந்திய அணியை பந்தாடி கோப்பையை வென்ற அவுஸ்திரேலியா! தோல்விக்கு பின்னர் பேசிய விராட் கோஹ்லி


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பின்னர் அது குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பேசியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான தொடரை அவுஸ்திரேலியா அணி 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளது.
நேற்று நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் அவுஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து தொடரை கைப்பற்றியது.
தோல்விக்கு பின்னர் பேசிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, இது எட்டக்கூடிய இலக்கு தான் என்று நினைத்தோம். கடைசி நேரத்தில் அவர்கள் எங்களை விட கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டுவிட்டனர்.
வழக்கத்தை விட அந்த அணியினர் செயல் சிறப்பாக இருந்தது, இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான்.
எங்கள் தரப்பில் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. அது சில ஆலோசனைகள் தான்.
இந்த தொடரில் தோல்விக்கு நாங்கள் எந்த காரணமும் முன்வைக்க முடியாது என கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்