சற்றுமுன் மீண்டும் பொதுமக்கள்மீது பயங்கரவாத தாக்குதல்! பலர் கவலைக்கிடம்?நெதர்லாந்திலுள்ள உட்ரெச் (Utrecht) நகரத்தில் சற்றுமுன்னர் ட்ரம் (tram) வண்டியில் பயணித்த பொதுமக்கள்மீது பயங்கர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்த பகுதியிலுள்ள 24 Oktoberplein junction எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிதாரி ஒருவர் பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒருவர் பலியானதுடன் பல பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் அவசர பாதுகாப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதிப் போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலதிக பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதுடன் தாக்குதலாளியைச் சல்லடைபோட்டுத் தேடுவதற்காக மூன்று உலங்கு வானூர்திகள் பறப்பில் ஈடுபட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி முற்பகல் 10:45 அளவில் இடம்பெற்ற இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவம்குறித்து நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே ”மிகவும் வருத்தத்துக்குரிய சம்பவம்” என கூறியுள்ளார். மேலும் நெதர்லாந்தின் தேசிய பயங்கரவாத ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் இந்த சூழ்நிலை குறித்து உயர்மட்ட சந்திப்பிற்கு அறிவித்துள்ளார்.
ஏற்கனவே நியூசிலாந்தில் பொதுமக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்து நான்கு நாட்களைக் கடந்துள்ள நிலையில் இன்றைய தினம் நெதர்லாந்தில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றமை உலகளவில் பெரும் அதிர்வலையைத் தோற்றுவித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்