ரணிலின் முடிவில் மாற்றமில்லை! தமிழர்களுக்கு மீண்டும் பேரிடியாக மாறிய செய்திவிடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆகிய இருதரப்பிலிருந்து யார் குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் உள்ளக நீதிக்கட்டமைப்பின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ஜெனீவா கூட்டத்தொடரில் எமது கொள்கைகளைத் உறுதிபடக்கூறி, நாட்டின் உள்ளகக் நீதிக்கட்டமைப்புக்களில் நம்பிக்கை உள்ளது எனத் தெளிவுபடுத்தியிருப்பதன் மூலமாக டி.எஸ்.சேனாநாயக்கவின் கொள்கைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல எம்மால் முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை அமைக்கத் தவறினால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என எச்சரித்திருந்தார்.
அது நேற்று தென்னிலங்கை அரசியல் தரப்பினர் பலரிடத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதன் பின்னரான ரணில் விக்ரமசிங்கவின் கருத்து தமிழர்களுக்கு எப்போதும் நீதி கிடைக்கப்போவதில்லை என்பதை நினைவூட்டுவது போல அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது என பிரதமர் ரணில் அறிவித்துள்ளமையானது தமிழ் சமூகத்திற்கு பேரிடியான செய்தியாகும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
காரணம் இவ் அரசாங்கம் தமிழர்கள் விடயத்தை அவதானமாக கையாளும் என கூறிவந்த நிலையில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வெளிநாட்டு பெறிமுறைகளை வெளிப்டையாக நிராகரித்துள்ளமை அரசியல் ரீதியிலும் பாரிய நெருக்கடிகளை தோற்று விக்கலாம் என கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்