இலங்கை அரசியல் மேடைகளில் பேசு பொருளாக மாறிய ஜெனிவா விவகாரம்


தமிழ் - சிங்கள அரசியல் மேடையில் ஜெனிவா விவகாரம் இலவச சந்தைப் பொருளாக்கப்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் 40ஆவது மாநாடு ஜெனிவாவில் இடம்பெற்றுவருகின்றது. இலங்கை அரசாங்கம் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் பலர் அங்கு கலந்து கொண்டு தமது வாதங்களை முன்வைத்து வருகின்றார்கள்.
உள்நாட்டிலும் ஜெனிவாவிவகாரம் பேசப்பட்டுவருகின்றது. அதேவேளை, மகிந்த மற்றும் ரணில் தரப்பினரும் இதனை மையப்படுத்தி தங்களின் அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் பேசிய அவர்,
இந்த நாட்டில் வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் அமைப்பதும், இழப்பீட்டு அலுவலகம் அமைப்பதும், விரைவானதாகவும், அர்த்தமுள்ளவகையிலும், பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதாகவும், உண்மைகளைக் கண்டறிவதாகவும் அமையவேண்டும் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
இதேவேளை, தமிழ் - சிங்கள அரசியல் மேடையில் ஜெனிவா விவகாரம் இலவச சந்தைப் பொருளாக்கப்பட்டுள்ளது என்றும் பேசியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்