அமெரிக்க ஜனாதிபதியின் முடிவு: நிம்மதி பெருமூச்சுவிட்ட வடகொரியா


வடகொரியா மீது விதித்த சமீபத்திய தடைகளை திரும்பப் பெறுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பலப்படும் எனவும், காலம் கனிந்தால் மிக விரைவில் இரு நாட்டு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேசுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
வடகொரியா அரசு தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வந்ததால், அமெரிக்க அரசின் பரிந்துரையால் அந்நாட்டின் மீது ஐநா மன்றம் பொருளாதார தடை விதித்திருந்தது.
இதனிடையே பன்னாட்டு பொருளாதார தடைகளை மீறி சீனாவிடம் இருந்து நிலக்கரி வாங்கியதால், வடகொரியா மீது கூடுதலான தடைகளை அமெரிக்கா சமீபத்தில் விதித்திருந்தது.


இந்நிலையில், இந்த தடையை திரும்ப பெற்றுக்கொள்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் மீதான அன்பின் காரணமாக டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்