யானையின் காலுக்கு அடியில் இருந்து புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்..! நொடிப்பொழுதில் நிகழ்ந்த சம்பவம்.. வைரலாகும் வீடியோஇந்த உலகில் எந்த ஒரு விஷயம் அல்லது விசித்திரம் மற்றும் பல அறிய நிகழ்வுகளை நமக்கு காணொளிகள் மூலமாக நமது கண்ணிற்கு அருகே காண்பிப்பவர்கள் புகைப்படங்களை எடுக்கும், ஒளிப்பதிவு செய்து புகைப்பட கலைஞர்கள்.
நமது இல்லத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் இருந்து, எங்கோ ஒரு காடுகளில் இருக்கும் அறியாத விலங்குகள் வரை துல்லியமாக புகைப்படங்கள் அல்லது காட்சிகளை பதிவு செய்து நமக்கு சமர்பிக்கின்றனர்.
அந்த வகையில், உள்ள பல புகைப்படவியலாளர்கள் சில புகைப்படங்களை தத்ரூபமாக எடுப்பதற்கு பல முயற்சிகளில் ஈடுபடுவார்கள். சில நேரங்களில் அவர்களின் உயிரை கூட பொருட்படுத்தாது அந்த காட்சிகளை பதிவு செய்ய தங்களை வருத்தி காட்சிகளை பதிவு செய்வார்கள்.
தென்னாபிரிக்க நாட்டில் உள்ள வன உயிரியல் புகைப்பட கலைஞர் ஸ்டீவ் பெயிலி, அங்குள்ள ப்ளூலே வனப்பகுதியில் உள்ள இடத்தில் இருந்த ஒற்றை யானையை புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார்.
அந்த யானையை கண்டதும் தரையில் படுத்துக்கொண்டு இவரை கண்ட யானை, மெல்ல மெல்ல அவரின் அருகே வந்து துதிக்கையால் நுகர்ந்து பின்னர் அங்கிருந்து சென்றது.
அந்த சமயத்தில் யானைக்கு பிடிக்காத ஏதேனும் ஒரு அசைவை அவர் செய்திருந்தால் அந்த நேரத்திலேயே சட்னியாகியிருப்பர் என்று இணையவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்