பிரபல இயக்குனர் கவலைக்கிடம்


விஜய்யின் தெறி படத்தில் வில்லானாக நடித்திருந்தவர் இயக்குனர் மகேந்திரன். முள்ளும் மலரும், உதிரிபூக்கள் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த மகேந்திரன் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வந்தார். அவரது மகன் கூட சமீபத்தில் தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதால் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியாகினர்.
இந்நிலையில் மகேந்திரனின் உடல் நலம் மிகவும் மோசமானதால் சென்னை அப்பல்லோவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. இச்செய்தி ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்