Brexit தாமதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: பிரான்ஸ்

ஜூன் மாதம் வரை பிரெக்சிட்டை தாமதப்படுத்தக்கோரி ஐரோப்பிய கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளதாக பிரித்தானிய பிரதமர் அறிவித்துள்ள நிலையில், தாமதத்திற்கான தெளிவான காரணங்களை அளித்தாலன்றி தாமதத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என பிரான்ஸ் அறிவித்துள்ளது.
ஆனால், பிரெக்சிட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பிரெக்சிட்டை தாமதப்படுத்தக்கோரி பிரித்தானிய பிரதமரால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை, 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளாலும் ஒப்புக்கொள்ளப்படவேண்டியது அவசியம் ஆகும்.
அப்படி ஒப்புக்கொள்ளப்படாத நிலையில், வேறு வழியின்றி பிரித்தானியா ஒப்பந்தங்கள் எதுவுமின்றி அடுத்த வெள்ளிக்கிழமை வெளியேற வேண்டியதுதான்.






இந்நிலையில், பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சரான Jean-Yves Le Drian, பிரித்தானிய பிரதமர் தெரஸா மேயின் பிரெக்சிட் தாமத கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மூன்று நிபந்தனைகள் விதித்துள்ளார்.
நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில், பிரித்தானியா ஒப்பந்தங்கள் இன்றி வெளியேற வேண்டியதுதான்.
தெரஸா மே, ஏற்கனவே பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காகத்தான் இந்த தாமதம் என்பதை, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்களை ஒப்புக் கொள்ளச்செய்ய வேண்டும்.



கடந்த நவம்பரில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்மீது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது.
இறுதியாக மே 23 முதல் 26 வரை நடக்கவிருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பதில்லை என்ற நிபந்தனையின் பேரிலேயே, பிரெக்சிட் தாமத கோரிக்கை முன் வைக்கப்பட வேண்டும் என்பவைதான் அந்த கோரிக்கைகள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்