டோனியின் கையால் இதை கொடுப்போம்..இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு CSK செய்யப் போகும் நெகிழ்ச்சி உதவி


ஐபிஎல் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் வரும் வருவாய் முழுவதையும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் என்.சீனிவாசன் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்மாவா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.
உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், வரும் 23-ஆம் திகதி துவங்குகிறது.
இதில் முதல் போட்டியிலே சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட் டுள்ளனர். போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் முடிந்துவிட்டது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை ஊக்கப்படுத் துவதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் டோனி, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் என்.சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது சீனிவாசன் கூறுகையில், வரும் 23-ஆம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் போட்டியில் வசூலாகும் மொத்த டிக்கெட் தொகையும் புல்வாமா தாக்குதலில் உயிரி ழந்த வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும். இந்தத் தொகை, சிஎஸ்கே கேப்டன் டோனி கையால் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்