CSK தான் மறுபடியும் கோப்பையை கைப்பற்ற வேண்டும்! அன்றே சொன்ன தல அஜித்


இன்று ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த IPL தொடங்கவுள்ளது. துவக்க ஆட்டத்தில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் தலைமையிலான CSKவும் இன்னாள் கேப்டனான கோலியின் RCBயும் மோதவுள்ளன.
CSKவில் ரெய்னா, பாப் டூபிளிஸிஸ், ப்ராவோ, வாட்சன் உள்ளிட்ட அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். அதே போல் RCBயும் சிறிதும் சலித்தது இல்லை. அந்த அணியிலும் டிவில்லியர்ஸ், ஹெட்மயர், மொயின் அலி, பார்த்தீப் பட்டேல் போன்றோர் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.


சினிமா பிரபலங்களில் தல அஜித்தின் ஆதரவு எப்போதும் CSK என்பது தெரிந்தது தான். CSK அணி மீண்டும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று அசல் பட வெளியான நேரத்திலேயே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்