IPL ஆட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் இந்த வருடம் ஏன் காணோம்- பிரபல நாயகியின் டுவிட்


கடந்த வருடம் சென்னையில் நடக்க இருந்த IPL போட்டிகள் பல பிரச்சனைகளால் வேறொரு இடத்திற்கு மாறியது. காரணம் காவிரி தண்ணீர் பிரச்சனை தான், பெரிய போராட்டம் நடந்தது.
இந்த வருடம் இன்று முதல் IPL கிரிக்கெட் விளையாட்டு தொடங்க உள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் விளையாட்டை பார்க்க ஆவலாக உள்ளனர். இந்த நேரத்தில் IPL விளையாட்டு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி.
இன்று #IPL12 விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை, தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ? என்று பதிவு செய்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்