அஜித் ரசிகர்களுக்கு மே 1ம் தேதி வரவுள்ள சர்ப்ரைஸ் விருந்து இதுதான்?


நடிகர் தல அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி தான் பிங்க் பட ரீமேக் நேர்கொண்ட பார்வை வெளியாகும் என முதலில் அறிவித்தார்கள். ஆனால் சில காரணங்களால் படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்கு தள்ளிப்போய்விட்டது.
இந்நிலையில் மே 1ம் தேதி அஜித்தின் அடுத்த படம் தல60 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. பிறந்தநாள் விருந்தாக இந்த அறிவிப்பு வருகிறது.
வினோத், வெங்கட்பிரபு, சிறுத்தை சிவா என பல இயக்குனர்களின் பெயர்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அஜித் யாருடன் கூட்டணி சேர்கிறார் என்பது மே 1ம் தேதி தெரிந்துவிடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்