பிளஸ் 2 தேர்வு முடிவு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்


பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை நாளை முதல் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் கடந்த மாதம் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிவடைந்தன. இன்று காலை முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் மாணவர்களை விட 5.07 சதவிகிதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 95.37 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை மாணவர்கள், பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 24 முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்