டோனிக்கு 3 போட்டிகளில் விளையாட தடை செய்யவேண்டும்: சேவாக் ஆவேசம்


ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில், நோ பால் விவகாரம் தொடர்பாக டோனிக்கு சிலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இதுகுறித்து கூறியதாவது, மைதானத்துக்குள் 2 சென்னை பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள், அவர்கள் நோ பால் குறித்து பேசுவதற்கு தகுதியானவர்கள், அப்படியிருக்கையில் டோனி மைதானத்திற்குள் சென்று நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது நடுவரை அவமதிப்பதாகும்.
2 போட்டிகள் அல்லது 3 போட்டிகளில் விளையாட தடை விதித்திருக்க வேண்டும். ஏனென்றால், நாளை வேறு ஒரு அணியின் கேப்டனும் இதேபோன்று செய்யமாட்டார் என்பதில் என்ன உத்தரவாதம் இருக்கிறது.
டோனிக்கு சில போட்டிகள் தடை விதித்து அவரை ஐபிஎல் போட்டியில் இருந்து விளையாடமல் செய்வது ஐபிஎல் போட்டியில் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும் என கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்