யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் மர்மமான வாகனம்? அச்சத்தில் மக்கள்


இலங்கையில் பாதுகாப்பு நி்ச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் யாழ்ப்பாணத்திலும் அதன் தாக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் மர்மமான வாகனம் ஒன்று நிற்பதாக தெரிய வருகிறது.
பொதிகளுடன் இந்த வாகனம் நிற்பதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளுடன் மர்ம வாகனம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் மர்ம வாகனம் நிற்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்