இனி விமான நிலையம் முன் செல்ஃபி எடுத்தால் மரண தண்டனை: புதிய சட்டம்!


விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிக பட்சம் மரண தண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த, தாய்லாந்தில் மாய் காவோ பகுதியை ஒட்டி விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. மாய் காவோ என்ற கடற்கரை, சுற்றுலா பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாக உள்ளது.
இதனால் விமானம் ஏறுவதும், இறங்குவதும் தரையிலிருந்து சில அடி உயரத்தில் நடப்பது வழக்கம். இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விமானம் பறக்கத் துவங்கும்போது செல்ஃபி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியாகும் அதிவேக காற்றில் சிக்கி சிலர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதன் காரணமாக மாய் காவோ விமான நிலையம் முன்பு செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்