பிறக்கவுள்ளது விகாரி தமிழ் வருடம்! எந்தெந்த இராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை அமைய போகிறது?தமிழர்களின் 60 வருட சுற்றுவட்டத்தின் 33ஆவது வருடமாகிய புதிய விகாரி தமிழ் வருட பிறப்பு வாக்கிய பஞ்சாங்கப்படி நாளைய தினம் (ஏப்ரல் 14ஆம் திகதி) பிற்பகல் 1.12 மணிக்கு உதயமாகிறது.
ஞாயிறு மு.ப 9.12 மணி முதல் பிப 5.12 மணிவரை விஷூ புண்ணியகாலமாகும். இக்காலப்பகுதியில் சிரசில் ஆலிலையும், காலில் இலவமிலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து ஸ்ஞானம் செய்து வழிபாடியற்ற வேண்டும்.
வெள்ளைநிற பட்டாடை அல்லது வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.
திருக்கணிதபஞ்சாங்கம்
இதன்படி புதுவருடம் நாளைய தினம் பிற்பகல் 2.09 மணிக்கு பிறக்கிறது. ஞாயிறு மு.ப 9.12 மணிமுதல் பி.ப 5.12 மணிவரை விஷூ புண்ணியகாலமாகும்.
இக்காலப்பகுதியில் சிரசில் இலவமிலையும், காலில் விளாஇலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து ஸ்ஞானம் செய்து வழிபாடியற்ற வேண்டும். வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.

கைவிசேசம் விஷூபுண்ணிய காலத்திலும் செய்யலாம். ஞாயிறு இரவு 10.31 முதல் 11.15 வரையான காலப்பகுதியிலும் செய்யலாம் அல்லது 17ஆம் திகதி புதன் பகல் 10.16 முதல் 11.51 வரையும், 18ஆம் திகதி பகல் 9.47 முதல் 11.46 வரையான காலப்பகுதியிலும் செய்யலாம்.
 1. மேஷ ராசி நேயர்களுக்கு இனிய காலம்
 2. ரிஷப ராசிக்காரர்களே! நினைக்க இயலாத ராஜ யோகம் வரலாம்
 3. மிதுன ராசிக்காரர்களே! ஆண்டின் தொடக்கமே அமர்க்களமாம்
 4. கடக ராசிக்காரர்களே! வருமான யோகத்தில் ஒருபடி மேலே செல்ல போகிறீர்கள்
 5. சிம்ம ராசிக்காரர்களே! நீங்கள் எறும்பைபோல் சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள்
 6. கன்னி ராசிக்காரர்களே! இந்த ஆண்டு முழுவதும் கூடுதல் கவனம் தேவையாம்
 7. துலாம் ராசிக்காரர்களே! பாராட்டு, புகழ் இன்னும் பல யோகங்கள் இருக்கு
 8. விருச்சிக ராசிக்காரர்களே! சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து வெகு விரைவில் கிடைக்குமாம்
 9. தனுசு ராசிக்காரர்களே! ஐப்பசிக்கு மேல் அதிர்ஷ்டக்காற்று வீசுமாம்
 10. மகர ராசிக்காரர்களே! எதிலும் தேவை கவனம்
 11. கும்ப ராசிக்காரர்களே! யோக வாய்ப்புகள் உருவாகுமாம்
 12. மீன ராசிக்காரர்களே! புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டுமாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்