இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ள வேண்டுமா? இவற்றை செய்தாலே போதுமே


இரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான், உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலுறுப்புகள் சீராக செயல்படும்.
உண்மையில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால், ஒட்டுமொத்த உடலும் பாதிக்கப்படும்.
அதில் மூளைக்குத் தேவையான இரத்த ஓட்டம் கிடைக்காமல் போனால், சோர்வு, தலைச் சுற்றல், ஞாபக மறதி, அடிக்கடி தலைவலி போன்றவற்றையும் ஏற்படுத்தி விடுகின்றன.
அந்தவகையில் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
 • தக்காளியில் உள்ள லைகோபைன், இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தங்காமல் தடுத்து, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். ஆகவே அன்றாடம் தக்காளி உண்ணும் உணவில் சேர்த்து வாருங்கள்.
 • நட்ஸில் முந்திரி, பாதாம் போன்றவை இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, உடலுக்கு வேண்டிய வைட்டமின் பி3-யையும் தரும். மேலும் இது உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.
 • பூண்டு இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்வதோடு, இரத்த நாளங்களில் ஹைட்ரஜன் சல்பைடை உற்பத்தி செய்து, இரத்த ஓட்டத்தை தங்கு தடையின்றி உடலில் சீராக வைக்கும். அதிலும் பூண்டை பச்சையாக தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
 • உணவில் வரமிளகாய் சேர்த்து வந்தால், இரத்தத்தட்டுக்கள் ஒன்று சேர்வதைத் தடுத்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக ஓடச் செய்யும். அதே சமயம், உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவும். முக்கியமாக இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட வழிவகுக்கும்.
 • இஞ்சி கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, கல்லீரலில் கொலஸ்ட்ரால் தங்குவதையும் தடுத்து, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.
 • க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் நிறைந்திருப்பதால், அவை இரத்த நாளங்களில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாதவாறு பாதுகாப்பதோடு க்ரீன் டீ கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் தேங்குவதை தடுக்கும். அதிலும் தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம்.
 • வெங்காயத்தில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது மோசமான இரத்த ஓட்டத்தினால் உடலினுள் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்க உதவும்.
 • மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்கும். கொலஸ்ட்ரால் அளவு உடலில் குறைவாக இருந்தால், இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
 • பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் கிடைத்து, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
 • தினமும் 5-6 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, இரத்த ஓட்டத்திற்கு தடை ஏற்படாமல் இருக்கும். மேலும் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவுகளும் அதிகரிக்கும்.
 • உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டுமானால், உணவுகள் மட்டுமின்றி, உடற்பயிற்சிகளும் அவசியம்.
 • ரோஸ்மேரி, தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி உடலுக்கு மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்