விண்வெளியில் ஒரு மாபெரும் அதிசயம்!


வான்வெளியில் காணப்படும் கருந்துளையின் முதல் போட்டோவை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டனர். வான்வெளியில் அதிபயங்கர ஈர்ப்பு சக்தியுடன் கூடிய ‘பிளாக் ஹோல்’ எனப்படும் கருந்துளைகள் உள்ளன. மிகப்பெரிய நட்சத்திரங்களை கூட உள்ளிழுக்கும் சக்தி இந்த கருந்துளைகளுக்கு உள்ளன.
இந்த கருந்துளையை ஆய்வு செய்ய 2017ல் சர்வதேச அளவில் ஈவென்ட் ஹாரிசன் தொலைநோக்கி திட்டம் உருவாக்கப்பட்டது. ஹவாய், அரிசோனா, ஸ்பெயின், மெக்சிகோ, சிலி உள்பட உலகின் பல இடங்களில் 8 ரேடியோ டெலஸ்கோப்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு திட்டம்தான் ஈவென்ட் ஹாரிசோன்.
இந்த ஆய்வு திட்டம் மூலம் 50 மில்லியன் ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ள எம்87 என்ற நட்சத்திர கூட்டத்தில் உள்ள கருந்துளை ஆராயப்பட்டது. 8 டெலஸ்கோப்களின் தகவல்களை ஒருங்கிணைத்து கருந்துளையின் இயற்கையான போட்டோ எடுக்கப்பட்டது. இது வரை கருந்துளையின் இயற்கையான புகைப்படம் வெளியானதில்லை.
வெறும் வரைபட வடிவமாகவே வெளிவந்து கொண்டிருந்தது. எம் 87 நட்சத்திர கூட்டத்தில் உள்ள கருந்துளையின் இயற்கையான போட்டோவை விஞ்ஞானிகள் நேற்று முதன் முதலாக வெளியிட்டனர்.
பிரசெல்ஸ், ஷாங்காய், டோக்கியோ, வாஷிங்டன், சாண்டியாகோ மற்றும் தைபே ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த கருந்துளையின் புகைப்படம் வெளியிடப்பட்டது. ஆரஞ்சு மற்றும் வெளிறிய வாயுக்களின் மத்தியில் இந்த கருந்துளை காணப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்