வாக்களித்த பின் சூர்யா- ஏஆர் ரகுமானின் ட்வீட்: என்ன சொல்லி இருக்கிறார்கள்?


தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டதாக நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் ட்வீட் செய்துள்ளனர்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிரபலங்கள் உட்பட பலரும் வாக்களித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் காலையிலேயே வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் வாக்களித்துவிட்டு, புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் ‘உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..!’ என தெரிவித்துள்ளார்.அதேபோல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் வாக்களித்ததை காட்டும் வகையில், தனது விரலை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். அதில் ‘நான் வாக்களித்து விட்டேன், நீங்கள்?’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்