வரலாற்றுச் சாதனை என்று பெருமைப்பட்ட மோடி! படுபயங்கரமானது என்று எச்சரித்தது நாசா

தனது சொந்த செயற்கைக் கோளை எதிர்ப்பு ஏவுகணை மூலம் தாக்கியழித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியாவின் மேற்படி சோதனையானது ‘பயங்கரமானது என நாசாவின் நிர்வாகி ஜிம் பிரைடென்ஸ்டைன் எச்சரித்துள்ளார்.
பூமியின் சுற்று வட்டப் பாதையில் குறைந்த தூரத்தில் இருந்த தனது சொந்த செயற்கைக் கோளை எதிர்ப்பு ஏவுகணை மூலம் தாக்கியழித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளதாக இந்தயப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 27ஆம் திகதி அறிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியானதன் பின்னர் பேசிய நாசாவின் நிர்வாகி ஜிம் பிரைடென்ஸ்டைன்,
இந்தியாவின் மேற்படி சோதனையானது ‘பயங்கரமானது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேலாக குப்பைகளை அனுப்புவது மிக மோசமான நிகழ்வுகளை உருவாக்கும். மனிதனின் எதிர்கால விணவெளிப் பயணங்களுடன் இது ஒத்துப்போகாது.
அக் குப்பைகளில் 60 பாரிய துண்டுகள் கண்டறிவதற்கு போதமானதாக இருந்ததாகவும் பூமியில் இருந்து தொலைவில் சுற்றுவட்டப் பாதையிலுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தின் மேல் பகுதியூடாக அவற்றில் 24 துண்டுகள் சென்றுள்ளன. எமது மக்களை ஆபத்தில் தள்ளும் விண்வெளி சுற்றுவட்டப் பாதையில் குப்பைகளை உருவாக்கும் செயற்பாட்டை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
எனினும் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்வெளி குப்பைகள் இல்லை என உறுதி செய்வதற்காக வளிமண்டலத்தில் தாழ்வு பகுதியில் இச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் குப்பைகள் காணப்பட்டால் அவை சிதைவடைந்து சில வாரங்களில் பூமியில் விழுந்து விடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சோதனை மேற்கொள்ளப்பட்ட 10 நாட்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சிறிய குப்பைகள் தாக்குவதற்கான வாய்ப்பை 44 சத வீதத்தினால் இது அதிகரித்துள்ளதாக நாசாவின் நிர்வாகி ஜிம் பிரைடென்ஸ்டைன் கடுமையாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்தியாவைத் தவிர அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளே செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்டுள்ள நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்