டோனியின் அணியை பின்பற்றுங்கள் கோஹ்லி: டிவில்லியர்ஸ்ன் டிப்ஸ்


டோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் செயல்பாடுகளையும், யுத்திகளையும் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பின்பற்றவேண்டும் என்று அந்த அணியின் முக்கிய வீரர் டி வில்லியர்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது 12-வது ஐபிஎல் சீசன் டி20போட்டித் தொடர் நடந்து வருகிறது. தற்போது வரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூருராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல், அனைத்திலும் தோல்விஅடைந்து கடைசி இடத்தை வகிக்கின்றது.
இதில் குறிப்பாக, ப்ளே-ஆப் சுற்றுக்குச்செல்ல குறைந்தபட்சம் 6 வெற்றிகளாவது தேவை.
இன்னும் மொத்தம் 8 ஆட்டங்கள் இருக்கும்நிலையில், அனைத்திலும் வெற்றிபெற்றால் மட்டுமே அணியின் ப்ளே-ஆப் சுற்றுக் கனவும் பலிக்கும்.
அதேசமயம், முன்பு எந்த சீசனிலும்இல்லாத அளவுக்கு இந்த முறைதான் ஆர்சிபி அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது என்றுதான் கூற வேண்டும்.
இதற்கு முன் எந்த ஐபிஎல் சீசசனிலும்இதுபோன்ற தொடர் தோல்விகளையும் அந்த அணி சந்தித்தது இல்லை. சரியான வீரர்களைத்தேர்வு செய்யாததும், களத்தில் வியூகங்களை வகுக்காததும் தோல்விக்கு முக்கியக்காரணங்களாகக் சொல்லப்படுகின்றது.
இந்நிலையில்தற்போது, ஆர்சிபி அணியில் உள்ள மூத்த வீரரும், தென் ஆப்பிரிக்காவின் ஏபிடிவில்லியர்ஸ் ஆங்கில நாளேடு ஒன்றில் அணி குறித்து கருத்துகளை எழுதியுள்ளார்.
அதில், இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபிஅணி தான் மோதிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக அணியின் சொந்த மைதானத்திலேயே போட்டியை வெல்ல முடியாமல் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தது சரிவின் முக்கியக்காரணமாகும்.
டி20 போட்டித் தொடரில் நீங்கள்வெல்ல வேண்டுமென்றால், முடிந்தவரை அணியின் சொந்த மைதானங்களில் நடக்கும் ஆட்டங்களில்வெல்ல வேண்டியது மிகவும் அவசியம்.
மேலும், அணி தோனி தலைமையிலான சிஎஸ்கேஅணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் தேர்ந்தெடுத்த யுத்திகளை பின்பற்றி நடக்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்