ஒரே நோ-பாலில் இரண்டு பேரை ரன்-அவுட் செய்த தமிழக வீரர் விஜய் ஷங்கர்! வைரலாகும் வீடியோ

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் விஜய் ஷங்கர், நோ-பால் வீசிய நிலையிலும் இரண்டு வீரர்களை ரன்-அவுட் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
ஹைதராபாத்-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் டி20 லீக் போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பு 231 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 113 சுருண்டு தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் பெங்களூரு அணி துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது, 19வது ஓவரை விஜய் ஷங்கர் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தில் சிராஜ் ஒரு ஷாட் அடித்தார். அதனை நோ-பால் நடுவர் அறிவித்தார். எனினும், புவனேஷ்வர்குமார் பீல்டிங் செய்து விஜய் ஷங்கரிடம் வீசினார்.உடனே விஜய் ஷங்கர் தனது அருகில் இருந்த ஸ்டம்பில் ரன்-அவுட் செய்தார். அப்போது கிராண்ட்ஹோம் கிரீசுக்கு வெளியில் இருந்தார். பின்னர் கீப்பரிடமும் விஜய் ஷங்கர் பந்தை வீசினார். விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவும் மறுமுனையில் ரன்-அவுட் செய்தார்.
இருமுனைகளிலும் சிராஜ், கிராண்ட்ஹோம் இருவருமே கிரீசுக்கு வெளியில் இருந்தனர். எனவே யாருக்கு அவுட் கொடுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் 3வது நடுவரின் முடிவுக்கு விடப்பட்டது.
அதன்படி, கிராண்ட்ஹோம் மிகவும் பொறுமையாக கிரீசுக்குள் நுழைய முயன்றதால் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்